ரயில் மறியல் போராட்டம்

சென்னை,டிசம்பர் 20
சட்டமேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னயில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ரயில் மறியலில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேஷனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைக்கும். அம்பேத்கர் பெயரை மேம் 100 முறை உச்சரிக்கட்டும். ஆனால் அவர் கருத்து குறித்தும் அவர்கள் பேச வேண்டும்” என்று கூறியிருந்தார்.இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இண்டியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பகுதியாக சென்னை, சைதாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.