பெங்களூரு, டிச. 24:
பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அபாரமாக திருக்குறள்களை கூறி பரிசுகளை பெற்றனர்.
தமிழுக்கு ஒப்பாக வேறு எந்த மொழியும் இல்லை என்று இலெமுரியா அறக்கட்டளை மற்றும் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான சு.குமணராசன் தெரிவித்தார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், 3 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா கடந்த டிச. 20 ஆம் தேதி பெங்களூரு இன்ஸ்டிடுயூட் அப் என்ஜினியர்சில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4 வது நாளான நேற்று (டிச. 23) திறக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை காட்டிய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதில் திருக்குறள், கதை சொல்லல் உள்ளிட்ட ஒப்புவித்தல் போட்டியில் முதல் மட்டும் இரண்டாம் வகுப்பு முதல் பரிசு, சித்தார்த், இரண்டாம் வகுப்பு தாமஸ் பப்ளிக் ஸ்கூல், இரண்டாம் பரிசு சர்வேஷ், முதலாம் வகுப்பு அரசினர் தமிழ் பள்ளி என் எஸ் லேன், மூன்றாம் பரிசு மேரி ஆண்ட்ரியா இரண்டாம் வகுப்பு, புனித அல்போன்சியார் பள்ளி, ஒப்புவித்தல் போட்டி மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு, முதல் பரிசு சமீரா, மூன்றாம் வகுப்பு தெய்வானை அம்மாள் பள்ளி, இரண்டாம் பரிசு சேகந்தராநீலம், நான்காம் வகுப்பு வேல்ஸ் பள்ளி, மூன்றாம் பரிசு ஸ்ரீ தன்யா, சைதன்யா பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
மாறுவேட போட்டியில் முதல் பரிசு ஸ்ரீப்ரியா, ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி, புனிதர் ஜான்ஸ் சாலை இரண்டாம் பரிசு அஸ்வத், அண்ணா சாமி முதலியார் பள்ளி, மூன்றாம் பரிசு ஜெய் பிரகாஷ், புனித அல்போன்சியார் பள்ளி, செய்கை பாடல் முதல் பரிசு சேவியர், புனித அல்போன்சியார் பள்ளி, இரண்டாம் பரிசு சோபியா, அரசினர் தமிழ் பள்ளி, எம் எஸ் நகர், மூன்றாம் பரிசு லோகிதா, புனித அல்போன்ஸ்யார் பள்ளி மாணவர்கள் பெற்றனர்.

இதனையடுத்து மாயவித்தைக் கலைஞர் பேபி ஜெயக்குமார் குழுவின் மந்திரமல்ல, தந்திரம்தான் என்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களுக்கு மூடநம்பிக்கை போக்கி, பகுத்தறிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்ற 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், வடலூர் ஜோதி இராமலிங்க சுவாமிகள் சன்மார்க்க சங்க துணைத் தலைவர் ஜெ.ஜெகநாதன் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுவ்களை வழங்கினார்.பின்னர் நடைபெற்ற சிந்தனைக்களம் நிகழ்ச்சியில், தமிழ் இனிது என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர்கள்
கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், உலகில் 7 ஆயிரம் மொழிகள் உள்ளன. அவற்றில் 6 மொழிகள் தொன்மையானவை. அதில் சீனமும், தமிழும் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குறியது.
பழமைய சீனமொழி எழுத்துரு மாறி, புதிதாக அந்த மொழியை மீட்டுறு செய்து வருகின்றனர். ஆனால் என்றும் மாறாமல், மக்களால் இன்றும் பேசப்பட்டு வரும் மொழியாக தமிழ் உள்ளது. திருவள்ளுவர் காலத்தில் இருந்த தமிழ் இப்போது இல்லை என்றாலும், தற்போது சிறிது மாறினாலும், தமிழ் இன்றளவும் அழியாமல் உள்ளது.என்றாலும் பேச்சு வழக்கிலும் தமிழின் ழ கரத்தின் உச்சரிப்பு அழிந்து வருகிறது. பழம் என்பது பலம் என்ற உச்சரிப்பு மெத்த படித்தவர்களிடமும் உள்ளது. எனவே இதனை மீட்டெடுக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும். 6 வது திணையாக இணையத்திலும் தமிழ் வந்துள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து தமிழின் உயிர்ம நேயம் என்ற தலைப்பில் பேசிய இலெமுரியா அறக்கட்டளை மற்றும் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான சு.குமணராசன் பேசுகையில், பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. தமிழர்கள் தாய்மொழியை படித்தால் மட்டுமே சுயமாக சிந்திகின்ற திறமை வளரும், வாழமுடியும்தமிழ் ஒன்றுதான் இயற்யாக தோன்றிய மொழி. அதன் சிறந்த பலத்தை உணராமல் தமிழர்கள் உள்ளனர். பல மொழிகளின் காலத்தை கூற முடியும் நம்மால் தமிழில் உள்ள சங்க இலக்கியத்தின் காலத்தை கூற முடியாமல் உள்ளோம். எனவே அதன் பழமையை நாம் உணராமல் உள்ளோம். தமிழில் உள்ள தொல்காப்பியம், திருக்குறளிலும் காலமும் நமக்கு தெரியாது. சூரியன் தோன்றிய காலம் எப்போது என்பது யாருக்கும் தெரியாதோ, அதே போலத்தான் தமிழ் தோன்றிய காலமும் யாருக்கும் தெரியாது. எனவே சூரியனுக்கு ஒப்பாக தமிழை கூற முடியும். தமிழுக்கு ஒப்பாக வேறு எந்த மொழியும் இல்லை என்றார்.