மெட்ரோ கட்டுமான பணியின் போது விபத்து ஒருவர் பலி

பெங்களூர், ஏப்.16-
பெங்களூரில் நம்ம மெட்ரோ கட்டுமான பணியில் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயுள்ளது.
நகரின் எலஹங்காவில் உள்ள கோகிலு கிராஸ் அருகே மெட்ரோ பணிக்காக ஒரு சிமென்ட்டால் உருவாக்கப்பட்ட தடை சுவர் தூண்கள் கட்டப் பட்டு வருகிறது. கோகிலு கிராஸ் பகுதியில்அந்த வாகனம் மீது சிமெண்ட் தூண்கள் துண்டாக உடைந்து, விழுந்தது.
இதன் அருகில் சென்ற ஆட்டோ மீது விழுந்ததால், ஆட்டோ நசுங்கியது.
ரிக்‌ஷா ஓட்டிச்சென்ற காசிம் சாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பயணித்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆட்டோ டிரைவர் காசிம், ஹெக்டேநகரில் வசிப்பவர் . இவர் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு நாகவாராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தான் இந்த திடீர் விபத்து ஏற்பட்டது.
ஆனால் பயணி தப்பி விட்டார். ஓட்டுநர் வெளியே வருவதற்குள், ஒரு சிமென்ட் சுவர் ஆட்டோ மீது விழுந்து, நசுங்கியதால் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோன்ற சம்பவம் 2023 ம் ஆண்டும் நடந்தது. நாகவாராவில் பிரதான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது ஒரு பெரிய தூண் விழுந்து அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
நாகவாரா அருகே கட்டுமானத்தில் இருந்த 40 அடி உயர மெட்ரோ தூண் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு தாயும் மகனும் உயிரிழந்தனர். கோவிந்த்புரா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எச்பிஆர் லேஅவுட் அருகே காலையில் இந்த சம்பவம் முன்பு நடந்தது.
தேஜஸ்வினி (28), அவரது மகன் விஹான் (2.5) ஆகியோர் உயிரிழந்தனர்.கணவர் லோஹித் குமார் மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் தங்கள் மனைவியை அலுவலகத்தில் இறக்கிவிடச் சென்று கொண்டிருந்தனர்.