சென்னை, ஏப்ரல் 28-
சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி, வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சட்ட விரோதமாக வசித்த வந்த 33 பேர் அடையாளம் காணப்பட்டனர்.அதன் படி மாங்காடு பகுதியில் 27 பேரும், குன்றத்தூர் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 33 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லியில் பதுங்கி இருந்த வங்கதேச நபரை கைது செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்தது என போலீசார் தெரிவித்தனர்.