அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்

அமிர்தசரஸ்: மே 10 –
பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கிய நிலையில், அந்த நாட்டு ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் குடியிருப்பு பகுதிகளில் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் பல சுட்டு வீழ்த்தப்பட்டன. அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலை தாக்கவும் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதனால், அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.