ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு

திருமலை: மே.17-ஆகஸ்ட் மாதம் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள் மற்​றும் இலவச டோக்​கன்​களை திருப்​பதி தேவஸ்​தானம் தனது இணை​யதளத்​தில் வெளி​யிட உள்​ளது. அதன்​படி 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்​கல் முறை ஆர்​ஜித சேவை​களுக்கு பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை மற்​றும் வரு​டாந்​திர பவித்​ரோற்​சவத்​திற்கு முன்​ப​திவு செய்​ய​லாம். 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்​கப்​பிரதட்சண டோக்​கன் வெளி​யாக உள்​ளது. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட் தொடங்​கு​கிறது.