
மங்களூரு, மே 19 –
தர்மஸ்தலா தாலுகாவைச் சேர்ந்த ஒரு விமானப் பொறியாளர், பேராசிரியருடனான காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தர்மஸ்தலா போளியூரைச் சேர்ந்த சுரேந்திர நாயர் – சிந்துதேவி தம்பதியரின் மகள் அகன்ஷா எஸ்.நாயர். மே 17 அன்று, பஞ்சாபின் பக்வாராவில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த அகன்க்ஷா, அதே பல்கலைக்கழகத்தில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பேராசிரியரான பிஜில் மேத்யூவை காதலித்து வந்தார். மேத்யூ இரண்டு குழந்தைகளின் தந்தை. என்று தெரிய வந்த பிறகு பேராசிரியர் மேத்யூவுடன் அகன்ஷ் சண்டை போட்டுள்ளார் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்
பின்னர், அகன்க்ஷா கல்லூரியில் பிகில் மேத்யூவுடன் படு படும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர், அவர் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாபில் உள்ள ஜலந்தர் காவல் நிலையத்தில் மேத்யூ மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மகளின்.
உடலைக் கொண்டு வந்த பெற்றோர் இன்று மாலை தர்மஸ்தலா பொலியூர் வீட்டிற்கு அருகில் இறுதிச் சடங்குகளைச் செய செய்கின்றனர்.
ஆகான்ஷா, டெல்லியில் 6 மாதங்களாக விண்வெளிப் பொறியாளராக வேலை செய்து கொண்டிருந்தார். அவள் வேலைக்காக ஜப்பான் செல்ல திட்டமிட்டு இருந்தார் மே 19 அன்று சான்றிதழ்களைப் பெற கல்லூரிக்குச் சென்றிருந்தார் மேலும், அகன்க்ஷா தனது பெற்றோருக்கு போன் செய்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்