புதிய அணு ஆயுதங்களை உருவாக்கும் பாகிஸ்தான்

புதுடெல்லி: மே 26 –
இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா சீனா மோதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) புதிய உளவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்தியா பாகிஸ்தானை இரண்டாம் கட்ட எதிரியாக, துணை பிரச்சனையாக, தீர்க்க கூடிய பிரச்சனையாகவே பார்க்கிறது. அவ்வப்போது பாகிஸ்தான் ஆதரவில் இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் பெரிய பிரச்சனை கிடையாது. அது தீர்க்க கூடிய பிரச்சனைதான்.
ஆனால் இந்தியாவிற்கு உண்மையான பிரச்சனையே சீனாதான். சீனாவை இந்தியா தனது முதல் எதிரியாக கருதுகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை அப்படி பார்க்கவில்லை. பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியாதான் முதல் எதிரி. பெரிய எதிரி. பாகிஸ்தான் இந்தியாவை ஒரு தங்களின் நாட்டிற்கே அச்சுறுத்தலாக பார்க்கிறது. இந்தியாவின் வழக்கமான இராணுவ பலத்தை எதிர்கொள்ள அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தொடரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் விரைவாக அதிகரிக்கும் திறன் கொண்டவை. சீனாவைத்தான் இந்தியா இதனால் பெரிய எதிரியாக பார்க்கிறது. பாகிஸ்தானை சமாளிக்கலாம் என்று நினைக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கூடுதல் அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஒரே எதிரி நாடு.. ஒரே டார்கெட் இந்தியாவாகவே உள்ளது என்று DIA இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் அமெரிக்க ஹவுஸ் ஆயுத சேவைகள் துணைக்குழுவிற்கு அளித்த உளவு ரிப்போர்ட்டில் இதை குறிப்பிட்டு உள்ளாராம்.
அணு ஆயுதம் பாகிஸ்தான் எப்போது அணு ஆயுதத்தை பயன்படுத்தும், தாக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இது உலகிற்கே ஆபத்து விளைவிக்கும்.. உதாரணமாக பாகிஸ்தானில் கடந்த சில நாட்களில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலநடுக்கங்கள் பல்வேறு விதமான சந்தேகங்களை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை அடுத்து அங்கே நடக்கும் நிலநடுக்கங்கள் வெறும் நிலநடுக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் நாட்டில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்களை சந்தித்தது – காலையில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
புவியியலாளர்கள் மற்றும் வானிலை நிபுணர்கள் நில அதிர்வு இமயமலைப் பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிட்டனர். இங்கே நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான நிகழ்வுதான். ஆனால் இந்த நேரத்தில் அங்கே நிலநடுக்கம் ஏற்படுவது அணு ஆயுத சோதனையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கிரானா மலைகளில் உள்ள பாகிஸ்தான் அணு ஆயுத சேமிப்பு வசதியின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இங்கே இருக்கும் சுரங்கப்பாதை தாக்கப்பட்டது. அதே நாளில்தான் அங்கே 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கே ஒன்று அணு ஆயுத வசதி ஏதாவது தகர்க்கப்பட்டு அதனால் அணு கசிவு ஏற்பட்டு இருக்கலாம். அங்கே ஒன்று அணு ஆயுத வசதி தகர்க்கப்பட்ட நிலையில் அங்கே இதனால் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.