பாகிஸ்தானை நம்பி ஏமாந்த அஜர்பைஜான்! துருக்கி உடந்தையுடன்

இஸ்லாமாபாத், ஜூன் 9- நம் நாட்டின் ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வெளிப்படையாக கண்டித்த அஜர்பைஜான் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தானும், துருக்கியும் சேர்ந்து இப்போது அஜர்பைஜானை ஏமாற்றி உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த மாதம் 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நம் நாடு ஏவுகணைகளை அனுப்பியது. 9 பயங்கரவாத முகாம், விமானப்படை, ராணுவ தளங்களை நம் நாடு அளித்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக நம் நாடு எடுத்து இந்த நடவடிக்கையை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் கண்டித்தன. இருநாடுகளும் பாகிஸ்தானுடன் நட்பாக உள்ள நிலையில் நம் நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு துணை நிற்பதாக அறிவித்தன. இதனால் நம் நாட்டு மக்கள் கடும் கோபமடைந்து துருக்கி, அஜர்பைஜான் நாட்டுக்கு சுற்றுலா செல்வது, அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வது உள்ளிட்டவற்றை நிறுத்தி உள்ளன. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவுடனான மோதலின்போது அஜர்பைஜான் பாகிஸ்தானுக்குஆதரவு தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் அந்த நன்றியை மறந்துவிட்டு அஜர்பைஜானின் முதுகில் குத்தி உள்ளது. கிஸ்தானுக்கும்,அஜர்பைஜானும் நட்பு நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.