ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

பெங்களூரு: ஜூன் 13- ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இதற்​காக மைதானத்​துக்கு வெளியே லட்​சகணக்​கான ரசிகர்​கள் திரண்​டிருந்​தனர். அப்​போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர்.இதையடுத்து ஆர்​சிபி அணி​யின் வணிக பிரிவு நிர்​வாகி நிக்​கோல் சோசலே, டிஎன்ஏ நிறு​வனத்​தின் துணை தலை​வர் சுனில் மேத்​யூ, வணி​கப்​பிரிவின் நிர்​வாகி கிரண், ஒருங்​கிணைப்பு நிர்​வாகி சுமந்த் ஆகியோரை போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி கைது செய்​தனர்.கைதான 4 பேரும் பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், அவர்​கள் ஜாமீன்​கோரி கர்​நாடக உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.இந்த மனு நீதிபதி எஸ்​.ஆர்​.கிருஷ்ணகு​மார் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இருதரப்​பினரின் வாதத்​துக்கு பின்​னர் நீதிபதி எஸ்​.ஆர்​.கிருஷ்ணகு​மார், “பெங்​களூரு நெரிசல் உயி​ரிழப்​பு​களுக்கு காரணம் யார் என்​பதை அரசு இன்​னும்முறை​யாக விசா​ரிக்​க​வில்​லை. அதற்​குள் கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. .எனவே கைதான ஆர்​சிபி அணி​யின் வணி​க​பிரிவு நிர்​வாகி நிக்​கோல் சோசலே, டிஎன்ஏ நிறு​வனத்​தின் துணை தலை​வர் சுனில் மேத்​யூ, வணி​க​பிரிவு நிர்​வாகி கிரண், ஒருங்​கிணைப்பு நிர்​வாகி சுமந்த் ஆகிய 4 பேருக்​கும் இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்​கப்​படு​கிறது”என உத்​தரவிட்​டார்​.