
டெல்லி: ஜூன் 17-
ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமாக அடைந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சத்தமின்றி ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ உடன் இணைந்து பிரதமர் மோடி நிகோசியா அருகே உள்ள மலைப் பகுதிகளை பார்வையிட்டார். இந்த பகுதியில் புகைப்படம் எடுத்து அவர் இணையத்திலும் வெளியிட்டார்.
இப்பகுதி 1974 முதல் துருக்கியின் ஆக்கிரமிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்துருக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சைப்ரஸ், துருக்கியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஒரு மத்திய கிழக்கு நாடாகும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் துருக்கிக்கு பெரிய மெசேஜ் கொடுக்கும் விதமாக மோடி சத்தமின்றி இந்த சம்பவத்தை செய்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளின் விவகாரங்களில் தலையிடும் துருக்கிக்கு பதிலடி தரும் விதமாக துருக்கி ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளின் முன் புகைப்படம் எடுத்து.. அந்த பகுதிகள் பற்றி சைப்ரஸ் நாட்டுடன் ஆலோசனை செய்து மோடி அதிரடி காட்டி உள்ளார். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடியை சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ வரவேற்றார்.