
புதுடெல்லி, ஜூன் 25 -இந்தியா, எந்தெந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது? நாள் ஒன்றுக்கு எத்தனை பேரல் இறக்குமதி செய்யப்படுகிறது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 8ம் இடத்தில் ‘குவைத்’ உள்ளது. நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் 7ம் இடத்தில் ‘நைஜீரியா’ உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 19 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 6ம் இடத்தில் ‘கொலம்பியா’ உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் 5ம் இடத்தில் ‘அமெரிக்கா’ உள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு லட்சத்து 39 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் 4ம் இடத்தில் ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்’ உள்ளது. நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்து 19 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் 3ம் இடத்தில் ‘சவுதி அரேபியா’ உள்ளது..
இறுதியாக, இந்த பட்டியலில் இந்தியாவின் நட்பு நாடான ‘ரஷ்யா’ முதல் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 22 லட்சத்து 62 ஆயிரம் கச்சா எண்ணெய் பேரல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தபோது ரஷ்யாவுக்கு உறுதுணையாக இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.