தர்மஸ்தலா: மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்

மங்களூரு, ஆகஸ்ட் 2 – தர்மஸ்தலத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக உடல்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. புகார் கூறியவர் சொன்ன இடத்தில் தோண்டப்பட்டு வருகிறது. புகார் கூறியவர் சொன்ன ஆறாவது இடத்தில் ஏற்கனவே ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதுஇந்த நிலையில் புகார் கூறியவர் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் பள்ளி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு பள்ளி சீருடை உடன் இந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக கூறினார். அவர் கூறிய இடத்தில் தோண்டும் பணி நடந்து வருகிறது. அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பள்ளி பசியுடன் புதைக்க சொன்னதாகவும் கூறினார் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அவர் கூறிய இடத்தில் தோன்றும் பணி நடந்து வருகிறது.
புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிறப்பு விசாரணைக் குழு, பள்ளி மாணவி காணாமல் போனது குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறது. தர்மஸ்தலத்தைச் சுற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவி காணாமல் போனார். தர்மஸ்தலத்தின் பெல்தங்காடி பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து சிறுமி காணாமல் போனது குறித்த தகவல்களை அதிகாரிகள் தற்போது சேகரித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சிறுமி காணாமல் போனது குறித்த பதிவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
உதவி எண்ணுக்கு அழைப்புகள்:
இந்த வழக்கு குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க இரண்டு நாட்களுக்கு முன்பு சிறப்பு விசாரணை குழு ஒரு உதவி எண்ணைத் தொடங்கியது. சிறப்பு விசாரணை குழுவால் திறக்கப்பட்ட உதவி எண்ணுக்கு தற்போது நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகின்றன. மாநிலத்தில் இருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் இருந்தும். ஆனால் விசாரணையின் விவரங்களைக் கேட்க இந்த அழைப்புகள் வருவதாக அறியப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்து தகவல்களைக் கேட்கின்றனர். சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று சிறப்பு விசாரணை குழு வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது.