சென்னை: ஆகஸ்ட் 2
நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான சுதந்திர உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து முக்கிய கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். தாய் திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மக்களிடம் உரையாற்றவுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதமர் உரையில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டம் என்று பொதுமக்களின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் கருத்துகள் குறித்து பகிர பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களே! Recommended For You “Gold Rate Today: மீண்டும் சரிந்த தங்கம் விலை.. மாதத்தின் கடைசி நாளில் சவரனுக்கு ரூ.320 குறைவு!” தங்களின் விடுதலைத் திருநாள் பேருரைக்கு மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த தங்கள் மாண்புக்கு என் ஜனநாயக வணக்கம் தமிழ்நாட்டிலிருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன் தாங்கள் காலமெல்லாம் போற்றிவரும் திருக்குறள் இனம் மொழி மதம் நாடுகடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல் You May Also Like “கிராம நத்தம் புறம்போக்கு பட்டா அவசியம்.. நத்தம் நிலங்களில் வசிப்போர் பட்டா கேட்டால் மறுக்க முடியுமா?” மனிதம் என்ற ஒற்றைக் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பது அதனை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட கனவு மற்றும் நிறைவேறாத கோரிக்கை இந்தியாவின் 79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்
தாங்கள் கேட்டுக்கொண்ட வண்ணம் நமோ செயலியிலும் இதனைப் பதிவிடவிருக்கிறோம் இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம் ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம். என்று தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.















