ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய இந்தியா?

வாஷிங்டன், ஆகஸ்ட் 2- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக கேள்விப்பட்டதாகவும், இது உண்மையாக இருந்தால் நல்ல முடிவு எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ள சூழலில், இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி 25 சதவீதம் இந்தியாவிற்கு ஆபத்து என்றாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது, அமெரிக்காவின் விவசாய பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு நாம் ஒப்புக்கொண்டால் அது அதனை விட மிகப்பெரிய பேராபத்து ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யபப்டுகிறது. நான் கேள்விப்பட்டது இது தான் உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனமாக்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா மற்றும், சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது உறுத்தலாக இருந்த நிலையில், டிரம்ப் எச்சரிக்கையை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறியுள்ளார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்ப், இது உறுதிப்படுத்தப்பட்டால் சிறந்த முடிவு என்றும் கூறியுள்ளார்.