அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தாமதமாவது ஏன்?

புதுடெல்லி, ஆகஸ்ட் 2- அசைவ பால் மற்​றும் மரபணு மாற்ற தானிய விவ​காரங்​களால் இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். இதன்​காரண​மாக உலகம் முழு​வதும் பொருளா​தார மந்தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்கு சந்​தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்​பது தொடர்​பாக பல்​வேறு நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்​திய தரப்​பில் மூத்த பொருளா​தார ஆலோ​சகர் ராஜேஷ் அகர்​வாலும் அமெரிக்க தரப்​பில் பிரென்​ட​னும் கடந்த 5 மாதங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். இந்த பேச்​சு​வார்த்​தை​யில் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஆனால் வேளாண் துறை சார்ந்த விவ​காரங்​களில் அமெரிக்​கா​வின் கோரிக்​கைகளை ஏற்க இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது. இதன்​காரண​மாக இரு நாடு​கள் இடையே வர்த்​தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தொடர்ந்து கால​தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில் வரும் 7-ம் தேதி முதல் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். மேலும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தால் இந்​தி​யா​வுக்கு அபராதம் விதிக்​கப்​படும் என்​றும் அவர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இதுகுறித்து மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மக்​களவை​யில் நேற்று முன்​தினம் கூறும்​போது, “நாட்​டின் பொருளா​தார நலன்​களை பாது​காக்க தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொண்டு வரு​கிறது. அதே​நேரம் வரி விதிப்பு தொடர்​பாக அமெரிக்கா​வுடன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது’’ என்று விளக்​கம் அளித்​தார். ந்​தி​யா​வின் வியூ​கம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் கண், காது, மூளை என்று வர்​ணிக்​கப்​படும் அரசி​யல் வியூக நிபுணர் ஜேசன் மில்​லர் கடந்த மே மாதம் இந்​தி​யா​வின் சிறப்பு தூத​ராக நியமிக்​கப்​பட்​டார். ஓராண்டு ஒப்​பந்த அடிப்​படை​யில் இந்​தி​யா​வுக்​காக அவர் பணி​யாற்றி வரு​கிறார். மேலும் அமெரிக்க அரசின் மிக முக்​கிய பதவி​களில் இந்​திய வம்​சாவளி​யினர் உள்​ளனர். அந்த நாட்​டின் முன்​னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதி​காரி​களாக இந்​திய வம்​சாவளி​யினர் பதவி வகிக்​கின்​றனர். அமெரிக்க அரசி​யலில், யூதர்களுக்கு இணை​யாக இந்​தி​யர்​களும் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றனர்.