ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் கண்டனம்

புதுடெல்லி, ஆகஸ்ட் 4- “ஒரு​வ​ரால் எவ்​வளவு​தான் பொய் பேச முடி​யும்’’ என்று ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்​சித்​துள்​ளார். டெல்​லி​யில் சமீபத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு நடந்​தது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பேசும்​போது, ‘‘பு​திய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது மத்​திய நிதி அமைச்​ச​ராக இருந்த அருண் ஜெட்​லி, என்னை மிரட்​டி​னார். வேளாண் சட்​டங்​களை தொடர்ந்து எதிர்த்​தாலோ, மத்​திய அரசை எதிர்த்து பேசி​னாலோ, என் மீது நடவடிக்கை எடுப்​போம் என்று அருண் ஜெட்லி மிரட்​டி​னார்’’ என்று தெரி​வித்​தார். இதற்கு அருண் ஜெட்​லி​யின் மகன் ரோஹன் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரி​வித்து வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘என் தந்தை ராகுலை மிரட்​டிய​தாக கூறுகிறார். என் தந்தை அருண் ஜெட்லி கடந்த 2019-ம் ஆண்டு இறந்​தார். ஆனால், வேளாண் சட்​டங்​கள் 2020-ம் ஆண்டு அறி​முகப்​படுத்​தப்​பட்​டன. இந்த உண்மை கூட தெரி​யாமல், தவறான கருத்​துகளை கூறுகிறார் ராகுல் காந்​தி. நம்​முடன் தற்​போது இல்​லாதவர்​களைப் பற்றி பேசும்போது ராகுல் காந்தி நாகரி​க​மாக பேசி​னால் நான் வரவேற்​பேன்’’ என்று தெரி​வித்​திருந்தார். இந்​நிலை​யில், ராகுல் காந்​தி​யின் கருத்​துக்கு மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று கடும் கண்​டனம் தெரி​வித்​தார். ரிஜிஜு கூறும்​போது, ‘‘மறைந்த ஜெட்​லி​யின் ஆத்மா சாந்தி அடையட்​டும். அவர் மீது ராகுல் காந்தி உண்​மைக்கு புறம்​பான தகவல்​களை கூறுகிறார். அதை கேட்ட பிறகு ஒரு நாள் முழுக்க சிந்​தனை​யாகவே இருந்​தேன். ஒரு​வ​ரால் எவ்​வளவு​தான் பொய் பேச முடி​யும் என்று நினைத்தேன். வேளாண் சட்​டங்​கள் கொண்டு வரு​வதற்கு ஓராண்​டுக்கு முன்பே ஜெட்லி மறைந்​து​விட்​டார். அப்​படி இருக்​கும் போது, ராகுலை ஜெட்லி எப்​படி மிரட்டியிருக்க முடி​யும்​?’’ என்று கேள்வி எழுப்​பி​னார். மத்​திய நிதி​யமைச்​ச​ராக அருண் ஜெட்லி பதவி வகித்​தார். அவர் மறைந்த பிறகு நிதி​யமைச்​ச​ரான நிர்​மலா சீதா​ராமன் கூறும்​போது, ‘‘அடிப்​படை ஆதாரமற்ற குற்​றச்​சாட்​டு​களை ராகுல் காந்தி கூறுகிறார். பொறுப்​பற்ற தன்​மைக்கு ராகுல் காந்​தி​தான் சிறந்த உதா​ரணம். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருக்​கும் ராகுல் காந்​தி, தற்​போது உயிருடன் இல்​லாத ஒரு​வர் மீது ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை சுமத்​து​வது இழி​வானது. இது​போன்ற பொறுப்​பற்ற தலை​வரின் பேச்​சால், அவரது கட்​சி​யும் நாடும்​தான் பாதிக்​கும். அவற்றை பற்றி ராகுல் கவலைப்படுவா​ரா? ஜெட்லி மீது ராகுல் காந்தி கூறிய கருத்​துகள் அப்​பட்​ட​மான பொய்’’ என்​றார்.