திமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: ஆகஸ்ட் 5-
ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்​ளது.
தமிழகம் முழு​வதும் திமுக​வினர் நடத்​தும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்​ளிட்ட விவரங்​கள் மூல​மாக ‘ஓடிபி’ எண்​ணைப் பெறக்​கூ​டாது என உயர் நீதி​மன்ற மதுரை கிளை இடைக்​காலத்​தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது.
இதை எதிர்த்து திமுக வழக்​கறிஞர் அனு​ராதா அற்​புதம் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு: ஓரணியில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது உண்​மைத்​தன்​மையை உறுதி செய்​யவே ஓடிபி பெறப்​படு்கிறது. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை மனதில் கொண்டு பொது​மக்​களுக்கு திமுக தொல்லை அளித்து வரு​வ​தாகக்​கூறி இது​போன்ற தடைகளை ஏற்​படுத்தி வரு​கிறது.