அமெரிக்க ஆக.8-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, பிரேசில் அதிபர் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva), இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடலில், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் உருவாகும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பிரேசில் அதிபர் உடனான உரையாடலுக்கு பிறகு, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “பிரேசில் அதிபர் லூலாவுடன் சிறந்த உரையாடல் நடைபெற்றது. பிரேசிலில் என் வருகையை நினைவுறுத்தத்தக்க வகையில் அர்த்தமுள்ளதாக மாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், ஆற்றல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் எங்கள் மூலதன ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் பிரேசில் மீது விதித்த கூடுதல் 25% வரி (மொத்தம் 50%) குறித்து, பிரேசில் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, கடந்த வியாழக்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலில் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக் கொண்டன.



















