சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?

மேற்கு ஆப்ரிக்காவின் கோகோ உற்பத்தியை காலநிலை மாற்றம் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், குறைந்து வரும் சாக்லேட் உற்பத்தியை, தன் காலமாக்கிக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால், நடைமுறை புறக்கணிப்பு, குறைந்த முதலீடு, காலத்துக்கு உதவாத கொள்கைகளால், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய, உலக சாக்லேட் தொழிலை மறுவடிவம் பெறச் செய்யக்கூடிய வாய்ப்பை இந்தியா பயன்படுத்துமா என்ற ஆதங்கமும் உள்ளது.
சப்ளை சிக்கல்
சாக்லேட் தயாரிப்புக்கு கோகோ சப்ளை செய்யும் நாடுகளில் பாதி, தற்போது சீட்டுக்கட்டு போல உற்பத்தி சரிவை சந்திக்கின்றன. உலகின் கோகோ தேவையில் 70 சதவீதம் அளவுக்கு சப்ளை செய்து வந்த மேற்கு ஆப்ரிக்க நாடுகள், இதுவரை காணாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.