இந்தியாவுடன் முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை;

வாஷிங்டன், ஆகஸ்ட் 8- வரிவிதிப்பு காரணமாக இந்தியா – அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள்,
மீண்டும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியப் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவுக்கு உச்சகட்ட அதிருப்யை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த வரி விதிப்புகளால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.