சென்னை: ஆக. 9-
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான், உஜ்வாலா யோஜனா திட்டம்.. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும். இந்த திட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படுகின்றன.. இந்நிலையில், இன்று ரக்ஷா பந்தன் என்பதால், மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதமரின் உஜ்வாலா யோஜனா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 10.33 கோடி PMUY இணைப்புகள் உள்ளன.. சமூகத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு அவர்களின் ஆரோக்கியத்தையும் அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எண்ணற்ற இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 12000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது…
பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட, 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் கோடி இழப்பீடாக வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. சர்ப்ரைஸ் தந்த மத்திய அரசு இது தவிர, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.. சந்தை விலையை விட குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் அரசு எண்ணெய் நிறுவனங்களால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதே இதுபோன்ற மானியம் வழங்குவதன் நோக்கமாக உள்ளது. அதுமட்டுமல்ல, இன்றைய தினம் ரக்ஷா பந்தன் என்பதால், பெண்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படியொரு அறிவிப்பு வெளியாகி, பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்த 2025ம் வருடத்துக்குள் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.12,000 கோடி செலவாகும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. எப்படி விண்ணப்பிப்பது பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆர்வமுள்ள தகுதியான BPL விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள எல்பிஜி விற்பனை நிலையம் அல்லது விநியோக மையத்திற்குச் சென்று பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை கேட்டு பெற வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்) பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு, பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவை தேவைப்படும்.

















