சிக்கினார் சுரேஷ் ரெய்னா.. அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி, ஆகஸ்ட் 13- சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் நேற்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. பேட்டிங் மட்டுமின்றி அவ்வப்போது பார்ட் ஃடைம் ஸ்பின் பவுலராகவும் செயல்பட்டு வந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது சுரேஷ் ரெய்னா சொந்த தொழில் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் தான் சுரேஷ் ரெய்னாவுக்கு நேற்று அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 1xBet எனும் சூதாட்ட செயலியை சுரேஷ் ரெய்னா சட்டவிரோதமாக புரோமோஷன் செய்ததாக கூறப்படுகிறது.