ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

புதுடெல்லி: ஆகஸ்ட் 14 –
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும்.இந்​நிலை​யில், தொலைக்​காட்சி நிறு​வனம் சார்​பில், அமெரிக்க தகவல் சுதந்​திர சட்​டத்​தின் கீழ் (எப்​ஓஐஏ) அந்​நாட்டு வெளி​யுறவுத் துறை மற்​றும் பாது​காப்​புத் துறை​யிடம் சில கேள்வி​களை கேட்​டிருந்​தது. குறிப்​பாக, ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது எப்​-16 ரக விமானங்​கள் சேதமடைந்​தது தொடர்​பான விவரங்​கள் கேட்​கப்​பட்​டிருந்​தன. இந்​தக் கேள்வி​களுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்​து​விட்​டது. அத்​துடன் இதுபற்றி பாகிஸ்​தான் அரசிடம்​ கேட்​கு​மாறு தெரிவித்​துள்​ளது.