ஸ்ரீநகர்: ஆக. 16- ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் சசோட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிக்கி 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சசோட்டி என்பது, மச்சைல் மாதா கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி கிராமமாகும். இந்த பகுதியில் கடந்த வியாழன் கிழமை மதியம் 12.25 மணிக்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். வெள்ளத்தில் சிக்கயவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், 2 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 46 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
அவர்களின் உறவினர்கள் 69 பேர் காணாமல் போயிருந்தனர். மச்செய்ல் மாதா கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித பயணத்தை மேற்கொள்வார்கள். இந்த பயணத்தின்போதுதான் மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. கிஸ்ட்வார் நகரிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிசோட்டியில் இருந்து 9,500 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு 8.5 கி.மீ. பயணம் தொடங்குகிறது. மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது இந்த புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அதில், வீடுகள் அடித்துச் செல்லப்படுவது தெரிகிறது.
உத்தர்காஷியின் தாராலி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒன்பது
நாட்களுக்குப் பிறகு மீண்டும் இமயமலையில் இப்படி ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது சோகத்தை உருவாக்கியிருக்கிறது.














