டெல்லி: ஆக. 16-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்சா’ கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் ராம்தாஸ் சோரன். இவர் அம்மாநில கல்வி துறை அமைச்சராகவும் இருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்திருக்கிறார். உடல் நலப்பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
அவரது மறைவை அம்மாநில முதல்வர் ஹேமந்த சோரன் உறுதி செய்திருக்கிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரும் அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “ஜார்க்கண்ட் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராம்தாஸ் சோரனின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவு மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவிப்பதுடன், இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு அளிக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் X தளத்தில் பதிவிட்டார்.














