மாநில அரசு நடவடிக்கை

டெல்லி, ஆகஸ்ட் 19
மத்திய அரசை பின்பற்றி, மாநில உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில், தர வரிசை பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சகம், நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி உட்பட பல்வேறு செயல்பாடுகளை மதிப்பிட்டு, தேசிய கல்வி நிறுவனங்கள் தர வரிசை எனும் என்.ஐ.ஆர்.எப்., பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 16 வகையான தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இவை, உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு உதவியாக உள்ளது.
கல்வி துறை இந்நிலையில், என்.ஐ.ஆர்.எப்., தர வரிசை பட்டியலுக்கு போட்டியாக, எஸ்.ஐ.ஆர்.எப்., எனும் மாநில உயர் கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலை தயார் செய்து வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.