கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதி -உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

புதுடெல்லி, ஆகஸ்ட் 21- குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டது. இதையடுத்​து, குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதிபி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று 2-வது நாளாக நடந்​தது. அப்​போது நடந்த வாதம்: மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா: ஒப்​புதலுக்​காக அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர்கள் ஒப்​புதல் அளிக்​கலாம், மறுக்​கலாம், குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரைக்​கலாம் அல்​லது திருப்பி அனுப்​பலாம் என 4 வாய்ப்​பு​கள் உள்​ளன. அந்த மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​க​வில்லை என்​றால், அவை காலா​வதி ஆகி​விட்​ட​தாகவே கருத வேண்​டும்.நீதிப​தி​கள்: அப்​படி​யென்​றால் மொத்த அதி​கார​மும் ஆளுநருக்​குத்​தான் உள்​ளது என்​பது​போல உள்​ளது. அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது பெரும்​பான்​மை​யான மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு என்​ப​தை​யும் மறந்​து​விடக் கூடாது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்​தால், அதுகுறித்த தகவலை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவிக்​கலாம். அதே​நேரம் ஆளுநர் காரணமின்றி ஒப்​புதல் அளிக்​காமல் நீண்​ட​கால​மாக கிடப்​பில் போட்டு வைக்க முடி​யாது. இவ்​வாறு ஒப்​புதல் அளிக்​காமல் இருப்​பது தற்​காலிக​மான​தா, நிரந்​தர​மானதா என்​பதே இந்த விவாதத்​தின் முக்​கிய கருப்​பொருள். சொலிசிட்​டர் ஜெனரல்: ஆளுநர் ஒன்​றும் நீட்​டிய இடங்​களில் கண்​களை மூடிக்​கொண்டு கையெழுத்து போடும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள் மூல​மாக தேர்வு செய்​யப்​படும் குடியரசுத் தலை​வர் மூல​மாகவே ஆளுநரும் நியமிக்​கப்​படு​கிறார். அப்​படி​யென்​றால் இது​வும் ஒரு​வகை​யில் ஜனநாயகத்​தின் வெளிப்​பாடே. அரசி​யல், பொதுப் பணி​யில் அனுபவம் பெற்​றவர்​களே ஆளுந​ராக நியமிக்​கப்​படு​கின்​றனர்.