அமெரிக்க பெண் இந்தியாவில் கைது

புதுடெல்லி: ஆக.22-
அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணம், எவர்​மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்​ரிக். இவருக்​கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரி​யானோவுக்​கும் சுமார் 15 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இத்​தம்​ப​திக்கு அடுத்​தடுத்து 7 குழந்​தைகள் பிறந்​தன. கடைசி ஆண் குழந்தை நோயல் ரோட்​ரிக் (6).
இந்த சிறு​வனுக்கு நரம்பு மண்டல பாதிப்​பு, சுவாசக் கோளாறு, எலும்பு அடர்த்தி குறைவு உள்​ளிட்ட பல்​வேறு பாதிப்​பு​கள் இருந்தன. இந்த சூழலில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிய மரி​யானோ, மெக்​ஸிகோவுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதன்​பிறகு இந்​திய வம்​சாவளியை சேர்ந்த அர்​ஸ்​தீப் சிங் என்​பவரை, சிண்டி ரோட்​ரிக் திரு​மணம் செய்து கொண்​டார்.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் 6 வயது சிறு​வன் நோயல் ரோட்​ரிக்கை காண​வில்​லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “சிறு​வன் நோயல் அவனது தந்தை மரி​யானோவுடன் மெக்​ஸிகோ​வில் வசிக்​கிறான்” என்று சிண்டி தெரி​வித்​தார்.
அடுத்த சில நாட்​களில் சிண்டி ரோட்​ரிக், அவரது இந்​திய வம்​சாவளி கணவர் அர்​ஸ்​தீப் சிங், 6 குழந்​தைகள் விமானத்​தில் இந்​தி​யா​வுக்கு புறப்​பட்​டனர். இதன் பிறகு அவர்​கள் தலைமறை​வாகினர். இதற்​கிடை​யில், மரி​யானோ​விடம் நடத்​திய விசா​ரணை​யில் நோயல் பிறப்​ப​தற்கு முன்பே அவர் நாடு கடத்​தப்​பட்​டது தெரிய​வந்​தது.
மேலும், சிறு​வனை ஒரு​முறை​கூட நேரில் பார்த்​த​தில்லை என்று போலீ​ஸாரிடம் மரி​யானோ தெரி​வித்​தார்​. இந்த வழக்கை எப்​பிஐ தீவிர விசாரணை நடத்தியபோது, சிறு​வன் நோயல் கொலை செய்​யப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.