7,000 ஊழல் வழக்குகள் நிலுவை

புதுடெல்லி: செப். 1-
மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன.
கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.
இவை தவிர குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மற்​றும் சிபிஐ தாக்​கல் செய்த 13,100 மேல் முறை​யீட்டு மனுக்​களும் பல உயர் நீதி​மன்​றங்​கள் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.
இவற்​றில் 666 மனுக்​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 1,227 மனுக்​கள் 15 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 2,989 மனுக்​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 4,059 மனுக்​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 1,778 மனுக்​கள் 2 ஆண்டு முதல் 5 ஆண்​டு​கள் வரை​யும், 2,441 மனுக்​கள் 2 ஆண்​டு​களுக்கு குறை​வாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.