சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

டெல்லி, செப்டம்பர் 1- கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. ஏழை எளிய மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் வகையில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வி ஆண்டுக்கு இதுவரை சேர்க்கை தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்காமல் காலம் தாழ்த்த கூடாது. உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது