புதுடில்லி, செப்டம்பர் 2-‘பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்குப் பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஏதேனும் திருத்தங்கள், ஆட்சேபனைகள், உரிமை கோரல்கள் இருந்தால், செப்., 1ம் தேதி காலக்கெடுவுக்கு பிறகும் தெரிவிக்கலாம்’ என, தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே சமயம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டப் பிறகே திருத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளது. பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்களை நீக்கியது. நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள்.
















