நியூயார்க், செப்டம்பர் 2-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது புதிய வேர்ல்டு ஆர்டருக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக தடைகளை இந்தியா எதிர்க்கும் நிலையில் ரஷ்யா – சீனாவுடன் இந்தியா நெருக்கமாகி உள்ளது. இது உலக அளவில் புதிய அதிகார சமநிலையை (New World Order) உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் ஏற்படுத்தலாம் என்றும் கருதுகின்றனர். தற்போதைய உலக நிலை என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம், ஆசியாவில் சீனா மற்றும் இந்தியாவின் செல்வாக்கு, சீனா – ரஷ்யா இடையேயான நட்பு ஆகியவற்றின் கலவையாகும். இந்தச் சூழலில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே உலக சட்டத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், அது ஒரு புதிய அதிகார சமநிலையாக இருக்கும். அதாவது அமெரிக்காவின் வீழ்ச்சியாக அது இருக்கும். இத்தகைய மாற்றங்கள் உலகப் போரின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா SCO மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த 2025 SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் கைகோர்த்து சிரித்தபடி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் இதை ஒரு திருப்புமுனை சந்திப்பு மற்றும் புதிய அதிகார சமநிலையின் தோற்றம் என்று வர்ணிக்கின்றனர். டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகத் தடைகள் மற்றும் இந்தியாவின் மீதான விமர்சனங்கள் காரணமாக, இந்தியா அமெரிக்காவிற்கு எதிரான சீனா மற்றும் ரஷ்யாவின் அணியில் இணைந்துள்ளது. இது ஆரம்பத்தில் ஒரு நிலைப்பாடாக இருந்தபோதிலும், இந்தியா இதை இப்போது தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் களமிறங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா களமிறங்கி உள்ளது. இந்தியாவிற்கும் – சீனாவிற்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்ட கால் நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.

















