பாகிஸ்தானுக்கு கைவிரித்த சீனா.. நிதி கொடுக்க மறுத்த ஜி ஜின்பிங்

இஸ்லாமாபாத்: செப்டம்பர் 5-
சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதியை சீனா வழங்கி வருகிறது. தற்போது இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் முக்கிய ரயில்வே திட்டத்துக்கு சீனா நிதி வழங்க மறுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ஆசிய மேம்பாட்டு வங்கியில் கடன் கேட்க தொடங்கி உள்ளது. பாகிஸ்தானும், சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நம் நாட்டுக்கு நல்ல உறவு இல்லை. மோதல் போக்கு இருக்கிறது. இதனால் பாகிஸ்தானும், சீனாவும் கைகோர்த்தன. சீனா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை அதிகரித்தது. ராணுவ தளவாடங்களை அதிகமாக பாகிஸ்தானுக்கு விற்பனை செய்தது. பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றில் சதவீதம் சீனாவின் தயாரிப்பாக உள்ளது. அதேபோல், பாகிஸ்தானில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதி வழங்குவது உள்ளிட்டவற்றை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானின் முக்கிய ரயில்வே திட்டத்துக்கு சீனா நிதி வழங்க மறுத்துள்ளது. அதோடு அந்த திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (China – Pakistan Economic Corridor) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கராச்சி -ரோஹ்ரி பிரிவு இடையேயான ரயில்வேயை மேம்படுத்த பாகிஸ்தான் முடிவு செய்தது. இதற்கான நிதியை சீனாவிடம் கேட்டது.
ஆனால் சீனா தற்போது மறுத்து விட்டது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியானது. இதையடுத்து பாகிஸ்தான் தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த ஆசியன் மேம்பாட்டு வங்கியில் கடன் கோரி உள்து. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் கோரி உள்ளது. இந்த சம்பவம் நடந்த காலம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. ஏனென்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை அரவணைக்க தொடங்கி உள்ளது. அதேவேளையில் டிரம்பின் வரி விதிப்பால் இந்தியா – சீனா பகையை மறந்து ஒன்றாக கைகோர்த்துள்ளன. இப்படியான சூழலில் தான் சீனா, பாகிஸ்தானுக்கு உதவி செய்ய மறுத்துள்ளது.
இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டுவதாலும், இந்தியாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக பாகிஸ்தானை, சீனா கைகழுவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் சரி, சீனாவின் இந்த முடிவு என்பது பாகிஸ்தானுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.