வாஷிங்டன்: செப்டம்பர் 6 அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. தற்போது டொனால்ட் டிரம்ப் அதிபரானது முதல் இந்த பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. கரீபியன் கடலில் வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யுஎஸ்எஸ் ஜேசன் தன்ஹம் எனும் போர்க்கப்பலை நிலைநிறுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக அந்த போர்க்கப்பல் மீது எஃப் 16 ரக போர் விமானங்களை வெனிசுலா பறக்க செய்து மிரட்டி உள்ளதால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி பார்த்தால் வெனிசுலாவில் மொத்தம் 2.80 கோடி மக்கள் உள்ளனர். வெனிசுலாவும், அமெரிக்காவும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் இருநாடுகளும் நட்பாக இருந்தன. வெனிசுலாவுக்கு அமெரிக்காவில் இருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்கா சார்பில் வெனிசுலாவுக்கு எஃப் 16 ரக போர் விமானங்கள் வழங்கப்பட்டன. 1982ம் ஆண்டில் வெனிசுலா மற்றும் அமெரிக்காவின் லாக்ஹிட் மார்ட்டின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா எஃப் 16 ரக 24 போர் விமானங்களை வெனிசுவாளிக்கு வங்கியது. இந்த விமானங்கள் 1982ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டுக்குள் வழங்கியது. அதுவரை எஃப் 16 ரக போர் விமானங்களை அமெரிக்கா தான் பயன்படுத்தி வந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி தான் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாட்டுக்கு முதல் முறையாக எஃப் 16 ரக போர் விமானங்களை வழங்கியது. அதுமட்டுமின்றி அந்த போர் விமானங்களை அப்கிரேட் செய்யும் பணிகளையும் அமெரிக்காவே மேற்கொண்டு வந்தது.
இவர் கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்பும் முன்வைத்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அதுமட்டுமின்றி நிகோலஸ் மதுரோவை கைது செய்ய உதவினால் ரூ.438 கோடியை பரிசுத்தொகையாக உயர்த்தி டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது கரீபியன் கடலில் அமெரிக்காவும் தனது போர்க்கப்பல்களை குவிக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் வெனிசுலாவும் போர் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா – வெனிசுலா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

















