இந்தியா, சீனாவை மிரட்டி பணிய​ வைக்க முடியாது: புதின் ஆதரவு

புதுடெல்லி, செப்டம்பர் 6- வரி​களை​யும் தடைகளை​யும் விதிப்​ப​தன் மூல​மாக ஆசி​யா​வின் இருபெரும் பொருளா​தா​ரங்​களான இந்​தி​யா​வை​யும், சீனாவை​யும் மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்​படை​யாகத் தெரி​வித்​துள்​ளார். சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற எஸ்​சிஓ மாநாடு மற்​றும் ராணுவ பேரணி​யில் பங்​கேற்​றதற்​குப் பிறகு முதல்​முறை​யாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த புதின் இதுகுறித்து மேலும் கூறிய​தாவது: வரி​கள் அதி​கரிப்​பு, வர்த்தக தடைகளை ஏற்​படுத்​து​வது போன்ற செயல்​களால் ஆசி​யா​வில் வலிமை வாய்ந்த பொருளா​தா​ரங்​களைக் கொண்ட நாடு​களான சீனா மற்​றும் இந்​தி​யாவை மிரட்டி பணி​ய​வைக்க முடி​யாது. காலனித்​துவ சகாப்​தம் இப்​போது முடிந்​து​விட்​டது.எனவே இந்த வழி​முறையை பின்​பற்றி அமெரிக்கா தங்​களது கூட்​டாண்மை நாடு​களு​டன் பேச முடி​யாது என்​பதை இப்​போ​தாவது உணர்ந்​து​கொள்ள வேண்​டும். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் நிர்​வாகம் பொருளா​தார அழுத்​தங்​களை ஒரு கரு​வி​யாக பயன்​படுத்தி ஆசி​யா​வின் இரு பெரும் பொருளா​தா​ரங்​களை (சீ​னா, இந்​தி​யா) பணி​ய​வைக்​கும் வேலை​யில் ஈடு​படு​கிறது.