இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு

புதுடெல்லி, செப்டம்பர் 6- இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2021 முதல் 2023 ஆண்டிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு அறிக்கையில் இந்தியா பதிவாளர் வெளியீட்டு உள்ளார். அது தொற்றா நோய்களால் 56.7% பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேலையில் தாய்வழி, பிறப்பு ஊட்டச்சத்து குறைபாடு 23.4% உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அதிர்ச்சியூட்டும் தகவலாக 31% பேர் மரணங்கள், இதய நோய் சார்ந்த பிரச்சனைகளால் நிகழ்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து சுவாச தொற்றுகளால் 9.3% பெரும், உடலில் திசுக்களில் ஏற்படும் கட்டிகள் 6.4% சதவீதம் பெரும், சுவாச பாதிப்புகளால் 5.7% பெரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜீரண மண்டல நோய்யால் 5.3% பேர், காய்ச்சலால் 4.9% பேர், சாலை விபத்து காயங்களால் 3.7% பேர், நீரிழிவு பாதிப்பு 3.5% பேர், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் மண்டலம் உறுப்பு நோய்களால் 3% பேர், தெளிவான காரணம் இல்லாத மரணங்கள் 10.5% பேர் உயிரிழந்தப்போ ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.