இந்தியாவிற்காக அமெரிக்காவுடன் மோதும் சீனா.. மிரண்ட டிரம்ப்

நியூயார்க், செப்டம்பர் 9- அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நியாயமற்றது, மோசமானது என்றும், இதை பெய்ஜிங் உறுதியாக எதிர்க்கிறது என்றும் சீனா தெரிவித்து உள்ளது. இந்தியாவிற்கான சீனத் தூதர் ஸு ஃபெய்போங், அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தைப் பயன்படுத்தி வந்தது, இதனால் பலனும் அடைந்தது, சுதந்திர வர்த்தகம் அமெரிக்காவின் ஒரு பாகமாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார். இந்தியா டிரம்ப் வரி ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார். அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, “அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது.