ஏ.ஐ., மூலம் இனி செயற்கை மழை

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும் பயன்படுவது வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் அப்படி ஒரு வியப்பான சம்பவம் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. அதுவும் அம்மாநிலத்திற்கான நீர் ஆதாரத்துக்காக நிகழ்ந்திருக்கிறது.நம்ப மாட்டார்கள் ராஜஸ்தான் தலை நகர் ஜெய்ப்பூரின் குடிநீர் தேவைக்காக, கடந்த 1876ல் ராம்கர் பகுதியில் பிரமாண்ட ஏரி உருவாக்கப்பட்டது. 15.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த ஏரியை காக்க, அதன் அருகில் அணையும் கட்டப்பட்டது.இதன் வாயிலாக நீர் தேக்கப்பட்டு குடிநீர் தேவைக்காக பயன் படுத்தப்பட்டு வந்தது.
கடந்த, 1982ல் கூட, ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்த ஏரியில் படகு போட்டிகள் நடந்ததாக கூறினால், இப்போது யாருமே நம்ப மாட்டார்கள்.
ஏனெனில், அந்த அளவுக்கு இந்த ஏரியும், அணையும் நீர் இல்லாமல் வறண் டு காய்ந்து போய் கிடக்கிறது. பன்கங்கா நதி படுகையில் புற்றீசல் போல பெ ருகிய ஆக்கிரமிப்புகளே அதற்கு காரணம்.