ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு: சசி தரூர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: செப்.13-
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் வரி​வி​திப்​பால் இந்​தியா பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். இந்​திய ரியல் எஸ்​டேட் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான (கிரெ​டாய்) சார்​பில் சிங்​கப்​பூரில் கடந்த 11-ம் தேதி சிறப்பு கண்​காட்சி தொடங்​கியது. மூன்று நாட்​கள் நடை​பெறும் இந்த கண்​காட்​சி​யில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றுள்​ளார்.
அங்கு அவர் கூறிய​தாவது: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி​வி​திப்பை அமல்​படுத்தி உள்​ளது. இதனால் இந்​தி​யா​வுக்கு பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. ஏராள​மானோர் வேலை இழந்து உள்​ளனர். குறிப்​பாக குஜ​ராத்​தின் சூரத் நகரில் வைரம், தங்க நகை தொழிலில் ஈடு​பட்​டிருந்த 1.35 லட்​சம் பேர் வேலை இழந்து உள்​ளனர். இதே​போல மீன் ஏற்​றும​தி, உற்​பத்​தித் துறை சார்ந்த தொழிலா​ளர்​களும் வேலை இழந்து உள்​ளனர்.
அமெரிக்க அதிப​ராக 45 பேர் பதவி வகித்து உள்​ளனர். ஆனால் யாரும் ட்ரம்ப் போன்று இல்​லை. அவரின் மனநிலை அடிக்​கடி மாறுகிறது. அமை​திக்​கான நோபல் பரிசு வேண்​டும் என்று எந்​தவொரு உலகத் தலை​வரும் பகிரங்​க​மாக கோர​வில்​லை. ஆனால் அதிபர் ட்ரம்ப் பகிரங்​க​மாக நோபல் பரிசை கோரு​கிறார்.
ரஷ்​யா​விடம் இருந்து பல்​வேறு நாடு​கள் கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​கின்​றன. ஆனால் இந்​தியா மீது மட்​டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடு​தல் வரி விதிக்​கிறார். இது ஒருதலைப்​பட்​ச​மான நடவடிக்கை ஆகும். இந்​தி​யா, ரஷ்யா ஆகிய நாடு​களின் பொருளா​தா​ரங்​கள் குறித்த மிக​வும் அநாகரி​க​மாக அவர் பேசி உள்​ளார். இது​போன்று எந்​தவொரு உலகத் தலை​வர்​களும் பேச மாட்​டார்​கள்.
அமெரிக்கா​வுக்கு மாற்​றாக இதர நாடு​களுக்கு ஏற்​றும​தியை அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. பிரிட்​ட​னுடன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதன்​மூலம் பிரிட்​ட​னுக்​கான ஏற்​றுமதி அதி​கரிக்​கும்.பிரதமர் நரேந்​திர மோடி அண்​மை​யில் சீனா​வுக்கு சென்​றார். இதன்​மூலம் இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக உறவு வலு​வடை​யும். இதே​போல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இறு​தி​யில் இந்​தியா வரு​கிறார். இந்​திய, ரஷ்ய உறவு தொடர்ந்து வலு​வடைந்து வரு​கிறது.இவ்​வாறு சசி தரூர்​ தெரிவித்​தார்​.