சென்னை, செப். 15- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றதும், நாடு முழுவதுதிலும் இந்திய அணி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். சில இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறினர்.




















