ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்

ஸ்ரீநகர்: செப். 17-
ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிட​ரால் சேத​மான சாலைகள் விரைந்து சீரமைக்​கப்​ப​டாத கராணத்​தால் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால், ஆயிரக்​கணக்​கான டன் ஆப்​பிள்​கள் குறித்த நேரத்​துக்கு அனுப்ப முடி​யாமல் தேக்​கமடைந்து அழுகி வரு​வது விவ​சா​யிகளை​யும், வர்த்​தகர்​களை​யும் வேதனை அடைய செய்​துள்​ளது.
கடந்த மாதம் கனமழை மற்​றும் மேகவெடிப்பு காரண​மாக ஸ்ரீநகர்​-ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை கடுமை​யாக சேதமடைந்​துள்​ளது. ஏறக்​குறைய 300 மீட்​டர் நீளத்​துக்கு சாலைகள் வெள்​ளத்​தால் அடித்​துச் செல்​லப்​பட்டு காணா​மல் போ​யுள்​ளது. மேலும் ஆங்​காங்கே பெரிய பனிப்​பாறை சரிவு​களும் ஏற்​பட்​டுள்​ளது.
குறிப்​பாக செனானி-உதம்​பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்​சாலைகளில் பாதிப்பு அதி​க​மாக காணப்​படு​கிறது.
இதனால் போக்​கு​வரத்து முடங்கி ஏராள​மான கன்​டெய்​னர் லாரி​கள் நாள் கணக்​கில் காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.
கடந்த 20 நாட்​களாக சாலைகள் சரிசெய்​யப்​ப​டாத​தால் கன்​டெய்​னர்​களில் உள்ள ஆப்​பிள்​கள் அழுகும் நிலைக்கு ஆளாகி​யுள்​ளது. இதனால் விவ​சா​யிகள் மற்​றும் ஆப்​பிள் வர்த்​தகர்​களுக்கு கோடிக்​கணக்​கில் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.
அழுகிய ஆப்​பிள்​களை பெட்டி பெட்​டி​யாக சாலைகளில் வீசி எறி​யும் வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் பரவலாக பகிரப்​பட்டு வரு​கிறது. காஷ்மீரில் சாதாரண விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​துக்கு இது பெரும் இழப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
இந்​தி​யா​வில் 80 சதவீத ஆப்​பிள்​கள் காஷ்மீரிலிருந்து உற்​பத்தி செய்​யப்​படும் நிலை​யில் நெடுஞ்​சாலை நாள் கணக்​கில் மூடப்​பட்​டுள்​ளது அதன் விநியோகத் தொடரை கடுமை​யாக பாதித்​துள்​ளதுடன் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தை​யும் கேள்விக்​குறி​யாக்கி உள்​ளது.
சாலைகள் கடந்த 20 நாட்​களாக சீரமைக்​கப்​ப​டாதது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா அதிருப்தி தெரி​வித்​துள்​ளார்.
மேலும் இது தொடர்​பாக அவர் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி​யுட​னும் பேசி​யுள்​ளார். அப்​போது அடுத்த 24 மணி நேரத்​தில் இதுதொடர்​பாக ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கையை மேற்​கொள்​வ​தாக அப்​துல்​லா​விடம்​ கட்​கரி உறு​தி அளித்​துள்​ளார்​.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளையும் ஆப்பிள்களை ரயில் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு ரயிலை காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.