டிரம்ப் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானம்: தப்பியது எப்படி?

வாஷிங்டன்: செப். 18-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலோனியா டிரம்புடன் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு பறந்து சென்றார். அப்போது அவரது விமானத்தை நோக்கி பயணிகள் விமானம் பறந்து வந்தது. இதுபற்றி அறிந்த நியூயார்க் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயணிகள் விமானத்துக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால் விமானி்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் டென்ஷன் எகிறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக வாஷிங்டனில் இருந்து பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அரசு முறை பயணமாக டிரம்ப் பிரிட்டன் சென்றார். டிரம்புடன் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் சென்றார். இருவருக்கும் பிரிட்டனில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு டொனால்ட் டிரம்ப் பயணித்தபோது வானில் பறந்த அவரது ஏர்போர்ஸ் ஒன் விமானமும், இன்னொரு விமானமும் நெருக்கமாக பறந்த தகவல் வெளியானது.
நியூயார்க் வான்வெளி பரப்பில் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்தார். இந்த விமானம் லாங்க் ஐலேண்டுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்துக்கு இணையாக இன்னொரு விமானமும் பறந்து வந்தது. ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்பிரிட் விமானம் 1,300 என்பது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெல் பகுதியில் இருந்து பாஸ்டனுக்கு பறந்து சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் டிரம்பின் ஏர் போர்ஸ் ஒன்- விமானத்துக்கு இணையாக பறந்தது. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை நெருங்கலாம் என்று கட்டுப்பாட்டு அறை நினைத்தது. இது நடந்தால் ஆபத்து ஏற்படலாம். இதனால் சுதாரித்த நியூயார்க் டவர் விமான கட்டுப்பாட்டு மையம் உடனடியாக ஸ்பிரிட் 1,300 விமானத்தின் விமானிகளை தொடர்பு கொண்டது. கவனமாக கவனியுங்கள்.. ஸ்பிரிட் 1300 விமானத்தை 20 டிகிரி கோணத்தில் வலதுபுரம் திரும்புங்கள்’’ என்று மெசேஜ் அளிக்கப்பட்டது.