ஓட்டல் கழிவறை கோப்பையில் நாகப்பாம்பு

ஜெய்ப்பூர்: செப்.23-
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு புகழ் பெயர்பெற்ற இடமாகும். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி புனித யாத்திரை வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஓட்டல்களில் அஜ்மீர் மற்றும் புஷ்கரில் உள்ள ஏராளமான விடுதிகளில் அறை எடுத்து தங்குவார்கள்.. அப்படித்தான் சில சுற்றுலா பயணிகள் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
அங்கு கழிவறைக்கு சென்ற சுற்றுலா பயணி, கோப்பையில் உட்கார சென்ற போது, நாகப்பாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது. இதை பார்த்து ஆடிப்போனார்.