இந்தியாவின் மீது பாயும் பொருளாதார தடை.. டிரம்ப் பயங்கர பிளான்?

நியூயார்க்: செப். 24-
இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருகிறது. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, பேச்சுவார்த்தைகள் மூலம் இதை சரி செய்ய வேண்டும், என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எண்ணெய் வர்த்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய்க்கான தடைகள் தொடர்பாக இந்தியாவுடனான பதட்டங்களை சரிசெய்ய அமெரிக்கா விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
மார்கோ ரூபியோ, இந்தியா அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான உறவு. இந்தியா எங்களுக்கு முக்கியமான நட்பு நாடு. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான துறைகளில் நாங்கள் நெருங்கிய உறவை கொண்டுள்ளோம். சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் உறவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த உறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், குவாட் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம் இந்தியா – அமெரிக்கா மோதல் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது அபத்தமானது.. இந்தியா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்காவை ஐரோப்பா வலியுறுத்தும் அதே வேளையில், ஐரோப்பா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.. ஐரோப்பா இப்போதும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதை தடுக்க வேண்டும்.
இந்தியாவிற்கு எச்சரிக்கை இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருகிறது. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, பேச்சுவார்த்தைகள் மூலம் இதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்தியா மீது இன்னும் ஆக்சன் எடுக்க வேண்டி இருக்கும். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அமெரிக்கா-இந்தியா உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி தேவைகளைப் புரிந்துகொண்டாலும், சலுகை விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு உதவுகிறது. ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியாவின் பணம் உதவுகிறது. இதை இந்தியா நிறுத்த வேண்டும். . நாங்கள் ஒரு நல்ல நட்பு நாடுகள் என்றாலும், எல்லாவற்றிலும் 100% ஒத்துப் போவதில்லை.குறிப்பாக எரிசக்தி விஷயத்தில். பிற சப்ளையர்களும் உள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்ப்போம் என நம்புகிறேன், என்று ரூபியோ மேலும் கூறினார். டிரம்ப் எச்சரிக்கை முன்னதாக ஐநா சபையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார். ரஷ்யாவுக்கு நிதி அளிக்கும் முக்கிய நாடுகளாக இந்தியாவும், சீனாவும் இருப்பதாகவும் அவர் சாடினார். ரஷ்ய எண்ணெய்யையும், எரிவாயுவையும் இவ்விரு நாடுகளும் தொடர்ந்து வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார்.