ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி

துபாய், செப். 24- ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – வங்​கதேச அணி​கள் மோதுகின்​றன. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் முதல் அணி​யாக இறு​திப் போட்​டி​யில் கால்​ப​திக்​கும். ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் சூப்​பர் 4 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை தோற்​கடித்​தது. இந்​நிலை​யில் 2-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இரவு வங்​கதேசத்​துடன் மோதுகிறது இரு அணி​களும் சர்​வ​தேச டி 20-ல் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்​ளன. இதில் வங்​கதேச அணி ஒரே ஒரு முறை மட்​டும் வெற்றி கண்​டிருந்​தது.பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் பந்து வீச்சு மற்​றும் பீல்​டிங்​கில் சிறிது தடு​மாற்​றம் கண்​டிருந்​தது. இந்த விஷ​யங்​களில் இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பேட்​டிங்​கில் அதிரடி​யாக விளை​யாடி 74 ரன்​கள் விளாசிய அபிஷேக் சர்​மா, 47 ரன்​கள் சேர்த்த ஷுப்​மன் கில் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும். இதே​போன்று பந்து வீச்​சில் திருப்பு முனையை ஏற்​படுத்​திக் கொடுத்த ஷிவம் துபே​வும் மீண்​டும் ஒரு​முறை உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தக்​கூடும். சுழலில் குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்​தி, அக்​சர் படேல் கூட்​டணி வங்​கதேச அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.
கடந்த ஆட்​டத்​தில் அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்த ஜஸ்​பிரீத் பும்ரா பார்​முக்கு திரும்​புவ​தில் முனைப்பு காட்​டக்​கூடும். லிட்​டன் தாஸ் தலை​மையி​லான வங்​கதேச அணி தடு​மாறியே சூப்​பர் 4 சுற்​றுக்கு நுழைந்​திருந்​தது. எனினும் அந்த அணி சூப்​பர் 4 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் இலங்கை அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 169 ரன்​களை இலக்கை விரட்​டிய வங்​கதேச அணி ஒரு பந்து மீதம் இருக்​கை​யில் வெற்​றியை வசப்​படுத்​தி​யிருந்​தது.