துபாய்: செப்.25- சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், பேட்டிங்கில் இந்தியாவின் அபிஷேக் சர்மாவும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தியும், ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்டியாவும் முதலிடத்தில் தொடர்கின்றனர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்டியலில் முதன்முறையாக முதலிடத்துக்கு முன்னேறியிருந்த வருண் சக்ரவர்த்தி கூடுதலாக 14 புள்ளிகளை பெற்று 747 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமது 12 இடங்கள் முன்னேறி 703 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தையும், வங்கதேசத்தின் முஸ்டாபிஸூர் ரஹ்மான் 6 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் பிடித்து உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஓர் இடம் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 74 ரன்கள் விளாசிய இந்தியாவின் அபிஷேக் சர்மா 907 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ஓர் இடம் முன்னேறி முறையே 3 மற்றும் 6-வது இடத்தில் உள்ளனர்.


















