டெல்லி: செப். 26- இந்திய விமானப் படையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களில் முக்கிய அங்கம் வகித்து வந்த மிக்-21 போர் விமானத்துக்கு இன்று முதல் ஓய்வளிக்கப்படவுள்ளது. ரஷியாவின் தயாரிப்பான இந்த விமானம் இன்று முதல் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் போர், கார்கில் போர், ஆபரேஷன் சிந்தூர் என பல்வேறு போர்களில் மிக் 21 ரக விமானங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. விமானப் படையின் 23 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த கடைசி மிக்-21 போர் விமானம் இன்று முதல் பயன்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப் படை நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள விழாவில், இந்த விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இந்திய விமானப் படையில் இந்த ரக போர் விமானங்கள் சிறுத்தைகள் என்று அழைக்கப்பட்டு வந்தன.















