டெல்லி: செப். 26-இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஆனது வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) தொடர்பான புதிய விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல் ஆன்லைன் விண்ணப்பங்கள் (Online applications) மூலம் வாக்காளர் அட்டையில் மாற்றங்களை செய்ய விரும்பும் எவருக்கும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை (Aadhaar-based authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளதுதேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் படிவம் 6 மூலம் புதிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், படிவம் 7 மூலம் வாக்காளர்களை சேர்ப்பது அல்லது விலக்குவது குறித்து ஆட்சேபனைகளை எழுப்புவது அல்லது படிவம் 8 மூலம் திருத்தங்களைக் கோருவது ஆகியவைகளை செய்யும் போது அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒடிபி-அடிப்படையிலான இ-சைன் ஐ (OTP-based e-sign) நிரப்ப வேண்டும்.















