ஏழுமலையானுக்கு குவியும் நன்கொடைகள்

திருமலை: ​ செப்.27-
திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் தாரள​மாக நன்​கொடைகளை தொடர்ந்து வழங்கி வரு​கின்​றனர். அது​போல் நன்​கொடை வழங்​கு​வோருக்​கு, அவர்​களின் நன்​கொடைக்​கேற்ப திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான​மும் தரிசனம் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களை செய்து கொடுத்து வரு​கிறது.
அதன் விவரங்​கள் வரு​மாறு: ஒவ்​வொரு ரூ. 10 ஆயிரம் நன்​கொடைக்​கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்​கப்​படு​கிறது.
இதுவே ஒரு லட்​சம் ரூபாய் நன்​கொடை​யாக வழங்​கி​னால், அந்த பக்​தர் வாணி அறக்​கட்​டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அரு​கில் தரிசனம் செய்து கொள்​ளலாம்.ரூ.5 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​கள், ஆண்​டுக்கு ஒரு​முறை சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக 5 பக்​தர்​களுக்கு தரிசன பாக்​கி​யம் வழங்​கப்​படும். ஒரு நாள் திரு​மலை​யில் தங்​கு​வதற்கு அறை​யும் வழங்​கப்​படும். மேலும், தரிசனம் முடிந்​ததும் சிறிய லட்டு பிர​சாதங்​கள் 6, ஒரு ரவிக்​கை, ஒரு துண்டு ஆகியவை வழங்​கப்​படும்.ரூ.10 லட்​சம் வரை நன்​கொடை வழங்​கும் பக்​தர்​கள், ஆண்​டுக்கு 3 முறை 5 பக்​தர்​கள் சுப​தம் நுழைவு​வா​யில் வழி​யாக சுவாமியை தரிசிக்​கலாம். இவர்​களுக்கு திரு​மலை​யில் தொடர்ந்து 3 நாட்​கள் தங்​கு​வதற்கு வசதி​கள் செய்து தரப்​படும்.
மேலும், ஒவ்​வொரு முறை​யும் தரிசனம் செய்​யும்​போது, 10 சிறிய லட்டு பிர​சாதம், 5 மகா பிர​சாதம் வழங்​கப்​படும். இத்​துடன் ரவிக்​கை, துண்டு ஆகியவை வழங்​கப்​படும்.